கோலாலம்பூர், ஏப்ரல் 18: கோலாலம்பூரில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஜி. சரவணனுக்கு பிரதமர் நன்கொடை வழங்கினார்.
1998 ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 50 கிலோமீட்டர் நடைப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஜி. சரவணன், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை அறிந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் பிரதமரின் உதவியை தனது செயலாளர் மூலம் அனுப்பி வைத்தார்.
பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமது ஃபர்ஹான் ஃபவுஸி,பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் மற்றும் அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஜீசா வான் இஸ்மாயிலையும் பிரதிநிதித்து, பிரதமர் தம்பதிகளின் உதவியை நேற்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சரவணனை விஜயம் செய்த போது வழங்கினார்.
"திரு. ஜி. சரவணன் ஒரு சாதாரண விளையாட்டு வீரர் மட்டுமல்ல, அவர் தேசிய பெருமையின் அடையாளமாகும்".இந்த நோய்க்கு எதிரான அவரது போராட்டம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி வான் அஜீசா ஆகியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"அவருக்கு ஆறுதல் கூற தாம் நேரில் வந்ததாகவும், சரவணன் வாழ்க்கையில் இந்த சோதனையை எதிர்கொள்வதில் எவ்வளவு வலிமையுடன் இருக்கிறார் என்பதை அவரின் நெகிழ்ச்சி தெளிவாக பிரதிபலிக்கிறது."சாம்பியனின் மன வலிமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது, என அவர் ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.அதே நேரத்தில் அஹ்மத் ஃபர்ஹான், சரவனுக்கு தொடர்ந்து உடல் வலிமையும் மன அமைதியும் வழங்கவும், அதே நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனந்தளராமல், அமைதி மற்றும் அவர்களின் அனைத்து விவகாரங்களும் எளிமை வழங்கப்பட வேண்டும் என்றும் ஆண்டவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்,.
54 வயதான முன்னாள் தடகள வீரரைக் காண இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலீம் மற்றும் தேசிய தடகள நல அறக்கட்டளையின் (YAKEB) பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.








