NATIONAL

இணைய வேலை வாய்ப்பு மோசடியில் 30,200 ரிங்கிட்டை இழந்தார் பெண்மணி ஒருவர்

18 ஏப்ரல் 2025, 5:35 AM
இணைய வேலை வாய்ப்பு மோசடியில் 30,200 ரிங்கிட்டை இழந்தார் பெண்மணி ஒருவர்

கோலா திரங்கானு, ஏப்ரல் 18 - கோலா திரங்கானுவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இணைய வேலை வாய்ப்பு மோசடியில் 30,200 ரிங்கிட்டை இழந்துள்ளார் . அதிக கமிஷன் கிடைக்கும் என வாட்சப் குழுவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி அவர் ஏமார்ந்துள்ளார்.

ஏப்ரல் 4ஆம் திகதி அன்று சோலர் விளக்கு இலவசமாக தருவதாகக் கூறி 39 வயதுடைய நபர் ஒருவர் அவரை தொடர்புகொண்டுள்ளார். பின், கமிஷன் அடிப்படையிலான மின்னியல் வர்த்தக வேலை வாய்ப்பு அப்பெண்மணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து ஒரு வாட்சப் குழுவில் சேர்க்கப்பட்ட அப்பெண்மணிக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டன. பின் சொல்லியபடி அவற்றுக்கான கமிஷன்கள் வழங்கப்பட்டதால், அந்த வேலை வாய்ப்பை அவர் முழுமையாக நம்பினார்.

எனினும், அடுத்தடுத்த பணிகளுக்கு கமிஷன் தரவில்லை, தாமதமாக வேலையை முடித்ததாகக் காரணம் சொல்லப்பட்டது.

அனைத்து கமிஷன்களையும் பெற சந்தேக நபருக்கு 6 தடவை 30,200 ரிங்கிட்டை அவர் அனுப்பியுள்ளார்.

பின், தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்ததாகக் காவல்துறை புகாரில் அப்பெண்மணி தெரிவித்துள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.