NATIONAL

புத்ரா ஹைட்ஸ்: 85 உயர்க்கல்வி கழக மாணவர்கள் பாதிப்பு

15 ஏப்ரல் 2025, 7:17 AM
புத்ரா ஹைட்ஸ்: 85 உயர்க்கல்வி கழக மாணவர்கள் பாதிப்பு

புத்ரா ஹைட்ஸ், ஏப்ரல் 15 - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயர்க்கல்வி கழக மாணவர்களின் எண்ணிக்கை 85 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் தங்களின் கல்வியைத் தொடர பல்கலைக்கழகங்களுக்கு திரும்பிவிட்டதாக உயர்கல்வி தலைமை இயக்குநர் டத்தோ பேராசிரியர் டாக்டர் அஸ்லின்டா அஸ்மான் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட 85 மாணவர்களில் 40 விழுக்காட்டினர் இயங்கலை வழியாக கல்வியைத் தொடர்வதாகவும், பாதிக்கப்பட்ட அவர்களுக்கு மடிக்கணினி வசதியை ஏற்படுத்தி கொடுக்க தமது அமைச்சு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு, இதில் மாணவர்கள் சிலருக்கு உளவியல் ரீதியான ஆதரவவையும் தாங்கள் வழங்குவதாக டாக்டர் அஸ்மான் குறிப்பிட்டார்.

வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணிகளுக்குப் பின்னர் அவர் அதனைக் கூறினார்.

பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.