NATIONAL

வரி தொடர்பாக விவாதிக்க ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்ய மலேசிய பரிந்துரை

11 ஏப்ரல் 2025, 7:25 AM
வரி தொடர்பாக விவாதிக்க ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்ய மலேசிய பரிந்துரை

கோலாலம்பூர், ஏப்ரல் 11 - வரி தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தை விவாதிக்கும் பொருட்டு அமெரிக்கா ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்ய, இவ்வாண்டு ஆசியான் தலைவராக பொருப்பேற்றிக்கும் மலேசியா தனது வெளியுறவு அமைச்சு மூலம் பரிந்துரை செய்யும்.

அந்த உச்சி நிலை மாநாட்டின் போது, அதிபர் டோனால்ட் டிரம்பை சந்திக்க அனைத்து ஆசியான் தலைவர்களும் அமெரிக்கா செல்ல ஒப்புக்கொண்டுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.

வரி தொடர்பாக எதிர்விணையாற்றும் நடவடிக்கைகளில் ASEAN ஈடுபடாது என்றும் தென்கிழக்கு ஆசிய வர்த்தக கூட்டமைப்பு வாஷிங்டனுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜஃப்ருல் குறிப்பிட்டார்.

'மலேசியாவைப் பொறுத்தவரை, வாஷிங்டனில் எங்கள் அதிகாரிகள் உள்ளனர். எங்கள் அமைச்சும் மற்றும் எங்கள் தூதரகம் இரண்டும் இதில் ஈடுபட்டுள்ளன. நிர்வாகம், மற்றும் எங்கள் வெளியுறவு அமைச்சரும் வெளியுறவுச் செயலாளருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இன்று காலை சின்.என்.பி.சி உடனான நேர்காணலில், தெங்கு சஃப்ருல் இவ்வாறு கூறினார்.

ஆசியான்-அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஆசியான் தயாராக இருப்பதாக ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆசியான் பொருளாதார அமைச்சர்களின் சிறப்பு மெய்நிகர் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.