NATIONAL

பிலிப்பின்ஸில் கன்லாவோன் எரிமலை வெடித்தது - 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலை கக்கியது

8 ஏப்ரல் 2025, 7:29 AM
பிலிப்பின்ஸில் கன்லாவோன் எரிமலை வெடித்தது - 4,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலை கக்கியது

மணிலா, ஏப்ரல் 8 - இன்று அதிகாலை மத்திய பிலிப்பின்ஸில் கன்லாவோன் (Kanlaon) எரிமலை வெடித்துச் சிதறியதில், 4,000 மீட்டர் உயரத்திற்கு வானில் கரும்புகையையும் சாம்பலையும் அது கக்கியது.

Negro தீவிலுள்ள அந்த எரிமலை வெடித்துச் சிதறும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

இதை அடுத்து அருகாமையிலுள்ள மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உள்ளூர் பள்ளிகளை மூடவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

பிலிப்பின்ஸ் நாட்டில் இன்னமும் தீவிரம் அடங்காத 24 எரிமலைகளில் இந்த கன்லாவோன் எரிமலையும் ஒன்றாகும்.

கடந்த டிசம்பர் மாதம் அது வெடித்த போது, 4 முதல் 6 கிலோ மீட்டர் தூரத்திலான சுற்று வட்டார கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.