NATIONAL

சுபாங் ஜெயாவில் மின்சார விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது

2 ஏப்ரல் 2025, 2:36 AM
சுபாங் ஜெயாவில் மின்சார விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது

சுபாங் ஜெயா, ஏப்ரல் 2 - சுபாங் ஜெயாவில் எரிவாயு குழாய் வெடித்ததைத் தொடர்ந்து அதன் சுற்று வட்டாரத்தில் தடைப்பட்ட மின்சார விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது.

நிலைமை பாதுகாப்பானது என்று அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டவுடன் விநியோக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெனாகா நேஷனல் நிறுவனம், தி.என்.பி தெரிவித்திருக்கிறது.

மறுசீரமைப்பு செயல்முறை முழுவதும் ஒத்துழைத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், முகநூலில் பதிவிட்ட அறிக்கை ஒன்றின் வழி தி.என்.பி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

அண்மைய நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வழங்கப்படும் என்று தி.என்.பி தெரிவித்துள்ளது.

மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பயனீட்டாளார்கல் கூடுதல் தகவல்களுக்கு 15454 என்ற எண்ணில் தி.என்.பி-ஐ தொடர்பு கொள்ளலாம்.

பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.