NATIONAL

பூச்சோங் தீவிபத்து- 25 பேருக்கு தீக்காயம், மூச்சுத் திணறல்- ஐவர் மருத்துவமனையில் அனுமதி

1 ஏப்ரல் 2025, 4:39 AM
பூச்சோங் தீவிபத்து- 25 பேருக்கு தீக்காயம், மூச்சுத் திணறல்- ஐவர் மருத்துவமனையில் அனுமதி

சுபாங் ஜெயா, ஏப். 1- இன்று காலை 10.35 மணி நிலவரப்படி இங்குள்ள

ஜாலான் புத்ரா ஹர்மோனி புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீவிபத்தில்

பாதிக்கப்பட்ட 25 பேருக்கு சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஆலயம்

ஒன்றில் முதலுதவி வழங்கப்பட்டது.

அந்த ஆலய வளாகத்தில் பலர் தீக்காயம், காயம் மற்றும் மூச்சுத்

திணறலுக்கு முதலுதவி பெறுவது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில்

கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐவர் தொடர் சிகிச்சைக்காக செர்டாங்

மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

இந்த தீவிபத்து தொடர்பில் இன்று காலை 8.10 மணியளவில் தகவலைப்

பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்

நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார்

கூறினார்.

இந்த சம்பவத்தில் சில வீடுகளிலும் தீவிபத்து ஏற்பட்டதாக அவர்

சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.