NATIONAL

சீ மற்றும் பாரா ஆசியான் விளையாட்டுகளுக்கான வீரர்களை தயார் செய்ய 146 மில்லியன் ஒதுக்கீடு

25 மார்ச் 2025, 8:32 AM
சீ மற்றும் பாரா ஆசியான் விளையாட்டுகளுக்கான வீரர்களை தயார் செய்ய 146 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், மார்ச் 25: 2027 சீ மற்றும் பாரா ஆசியான் விளையாட்டுகளுக்கான வீரர்களை தயார் செய்ய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு 146 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

2017-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த போட்டியைவிட இது 20 விழுக்காடு அதிமாகும்.

2024-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட போடியம் திட்டத்தின் மூலம் இந்த ஒதுக்கீடு கட்டம் கட்டமாகப் பயன்படுத்தப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

'போடியம் திட்டத்தின் கீழ் சிறந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சியை நிர்வகிக்க போதிய நிதியை அமைச்சு வழங்கியுள்ளது. பயிற்சியாளர் வழங்கும் பயிற்சித் திட்டத்தின் மூலம் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த முடியும், என்றார் அவர்.

போடியம் திட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள் மற்றும் 2028 ஒலிம்பிக்ஸ் போன்ற பிற அனைத்துலக விளையாட்டுகளுக்கான தயார்நிலை பணிகளும் அடங்குவதாக நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது அவர் கூறினார்.

--பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.