NATIONAL

வேறொருவரின் மைகார்ட்-ஐ பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது

10 மார்ச் 2025, 7:41 AM
வேறொருவரின் மைகார்ட்-ஐ பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது

பொக்கொக் செனா, மார்ச் 10 - கடன் பெறும் நோக்கத்துடன் வேறொருவரின் மைகார்ட் எனப்படும் அடையாள அட்டையைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை தேசிய பதிவுத் துறை (ஜே.பி.என்) கைது செய்தது.

ஜே.பி.என் விரைந்து செயல்பட்டதை அடுத்து, கோலாலம்பூர், கம்போங் பண்டானில் 35 வயதுடைய அந்த உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

''நபர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தமது மைகார்ட் அட்டை தொலைந்து போனதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். திடீரென்று வேறொருவர் தமது அடையாளத்தைப் பயன்படுத்தி தொலைபேசி மற்றும் இதர பொருள்களைப் பெற கடன் வாங்குவதைக் கண்டறிந்தார்.

அவர் தமது மைகார்ட் அட்டை தொலைந்து போனதைப் புகாரளிக்க முன்வந்தார். மேலும், தமது மைகார்ட் அட்டை வேறொருவரால் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகித்ததை புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஜே.பி.என்-இன் உளவுத்துறை விசாரணை நடத்தி மார்ச் ஏழாம் தேதி சந்தேக நபரைக் கைது செய்தது,'' என்றார்.

அச்சந்தேக நபரின் உண்மையான விவரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.

போலி மைகார்ட் அட்டையை சொந்த அடையாளமாகப் பயன்படுத்தியதற்காகவும் வேறொருவரின் மைகார்ட் அட்டையை வைத்திருந்ததற்காகவும், 1990-ஆம் ஆண்டு தேசிய பதிவு விதிமுறைகள் 25(1)(e) மற்றும் 25(1)(o)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.