NATIONAL

சபாவில் வெள்ளத்தில் பாதிப்பு அதிகரிப்பு- 4,122 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

10 மார்ச் 2025, 2:32 AM
சபாவில் வெள்ளத்தில் பாதிப்பு அதிகரிப்பு- 4,122 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோத்தா கினபாலு, மார்ச் 10 - சபா மாநிலத்தில் வெள்ளத்தில்

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி

1,357 குடும்பங்களைச் சேர்ந்த 4,122 பேராக உயர்வு கண்டுள்ளது. நேற்றிரவு

இந்த எண்ணிக்கை 1,203 குடும்பங்களைச் சேர்ந்த 3,579 பேராக மட்டுமே

இருந்தது.

தெனோம் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள் எட்டு துயர் துடைப்பு

மையங்களில் 276 குடும்பங்களைச் சேர்ந்த 743 பேர் அடைக்கலம்

நாடியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுச் செயலகம்

கூறியது.

பியூபோர்ட் மாவட்டத்தில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் 432

குடும்பங்களைச் சேர்ந்த 1031 பேர்ர் தங்கியுள்ள நிலையில்

மெம்பாக்குட்டில் 293 குடும்பங்களைச் சேர்ந்த 872 பேர் தஞ்சம்

புகுந்துள்ளனர்.

இதனிடையே, சூக் மாவட்டத்தில் செயல்படும் இரு நிவாரண

மையங்களில் 241 குடும்பங்களைச் சேர்ந்த 1,031 பேரும் கெனிங்காவில்

உள்ள இரு மையங்களில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 137 பேரும்

தங்கியுள்ளனர்.

இந்த வெள்ளப் பேரிடரில் பியூபோர்ட், மெம்பாக்குட், தெனோம், கெனிங்காவ் ஆகிய பகுதிகளில் உள்ள 37 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.