NATIONAL

பாலர் பள்ளி பாடத்திட்டம் தரமான, பொருத்தமான முறையில் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்

7 மார்ச் 2025, 8:35 AM
பாலர் பள்ளி பாடத்திட்டம் தரமான, பொருத்தமான முறையில் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்

கோலாலம்பூர், மார்ச் 7 - பாலர் பள்ளி பாடத்திட்டம் தரமான, பொருத்தமான மற்றும் இதர நாடுகளின் பாடத்திட்டங்களுடன் ஒப்பிடத்தக்கதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளது.

குழந்தை நிபுணர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மழலையர் பள்ளி நடத்துனர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் ஈடுபாட்டுடன், 2026-ஆம் ஆண்டு பாலர் பள்ளி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.

''இதன் சாத்தியக்கூற்றை உறுதி செய்வதற்காக, இப்பாடத்திட்டம் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவன பாலர் பள்ளிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 34, கேபிஎம் பாலர் பள்ளிகள், ஐந்து KEMAS மழலையர் பள்ளிகள், மூன்று ஒருமைப்பாட்டு மழலையர் பள்ளிகள் மற்றும் எட்டு தனியார் மழலையர் பள்ளிகள் உள்ளடக்கியுள்ளன.

கல்வி அமைச்சு, KEMAS, பூர்வக்குடி மேம்பாட்டுத் துறை, JAKOA , தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறை, JPNIN ஆகியவற்றில் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்ட கட்டமைப்பில் பயிற்சித் திட்டங்களும் வெளிப்பாடுகளும் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகின்றன என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வோங் இவ்வாறு பதிலளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.