NATIONAL

விவசாய வடிகால் & நீர்பாசன அமைப்பைப் பராமரிக்க 55 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

7 மார்ச் 2025, 8:16 AM
விவசாய வடிகால் & நீர்பாசன அமைப்பைப் பராமரிக்க 55 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், மார்ச் 7 - இவ்வாண்டு நாடு முழுவதிலும் விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் கீழ், விவசாய வடிகால் மற்றும் நீர்பாசன அமைப்பைப் பராமரிக்க 55 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தொகையில், 14.8 மில்லியன் ரிங்கிட் கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.

வெள்ளக் காலத்தின்போது குறிப்பாக கிழக்குக்கரை மாநிலத்தில், விவசாயத் துறையில் தாக்கத்தைக் குறைப்பதற்கான அமைச்சின் ஆக்கப்பூர்வமான தணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே இம்முயற்சியாகும் என்று அவர் கூறினார்.

விவசாயத் துறையில் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்க, நாட்டின் வானிலை அறிக்கை முறை இன்னும் துல்லியமாகக் கணிக்கக்கூடிய வகையில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.