NATIONAL

பினாங்கில் மோட்டார் சைக்கிள் – லோரி கோர விபத்து - சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் படுகாயம்

19 பிப்ரவரி 2025, 4:44 AM
பினாங்கில் மோட்டார் சைக்கிள் – லோரி கோர விபத்து - சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் படுகாயம்
பினாங்கில் மோட்டார் சைக்கிள் – லோரி கோர விபத்து - சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் படுகாயம்

சுங்கை பாக்காப், பிப் 19 - நேற்று காலை பினாங்கில், மோட்டார் சைக்கிளும் லோரியும் சம்பந்தப்பட்ட விபத்தில், சுங்கை பாக்காப் தமிழ்பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் மிக மோசமாக காயமுற்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அவ்விருவரில், 5 வயது சிறுமியின் வலது கால் துண்டானதோடு ஏழு வயது சிறுவனின் இடது கை முறிவுக்கும் பலத்த காயத்திற்கும் உள்ளானது .

இந்த விபத்தில் அந்த மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற அந்த சிறார்களின் பாட்டியும் காயத்திற்கு உள்ளானதால் அம்மூவரும் செபெராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே காயம் அடைந்த சிறார்களை செனட்டர் டாக்டர் லிங்ககேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டதோடு அச்சிறார்களின் நிலவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.

அந்த சிறுவனும், சிறுமியும் அவர்களது அத்தையின் பராமரிப்பில் இருந்து வருவதாக தெரிகிறது.

பாலர் பள்ளியில் பயின்றுவரும் அந்த சிறுமியின் வலது கால் முழுமையாக துண்டாகி விட்டதால் செயற்கை கால் உதவி பொருத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருப்பதாக லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.