NATIONAL

பூப்பந்து போட்டி முதல் ஆட்டத்தில் மலேசியா தோல்வி

13 பிப்ரவரி 2025, 4:48 AM
பூப்பந்து போட்டி முதல் ஆட்டத்தில் மலேசியா தோல்வி

கிங்டாவ், பிப் 13 - சீனா, கிங்டாவில் நடைபெறும் பிஏம்டிசி (BAMTC) எனும் ஆசிய கலப்பு அணி பூப்பந்து போட்டியில் பி குழுவில் இடம் பெற்றிருக்கும் மலேசியா, 2-3 என்று முதல் ஆட்டத்தில் ஹோங் கோங்கிடம் தோல்வி கண்டுள்ளது.

முதல் ஆட்டத்தில் களமிறங்கிய நாட்டின் கலப்பு இரட்டையர்களான ஹோ பாங் ரோன் - செங் சு யின் ஜோடி, ஹோங் கோங்கின் தாங் சுன் மன் -ங் சி யாவ் இணையரிடம் 21-17, 17-21, 11-21 என்ற நிலையில் தோல்வி கண்டது.

அதனைத் தொடர்ந்து விளையாடிய நாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டக்காரர் கே.லெட்சனா 21-18 மற்றும் 21-18 என்று சலோனி சமிர்பாய் மேத்தாவை நேரடி செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய ஜஸ்டின் ஹோ 19-21, 16-21 எனும் நேரடி செட்களில் லீ செக் யூவிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில், மலேசியாவை மீண்டும் சமன் செய்ய முயற்சித்த கோ பெய் கீ - தியோ மெய் சிங் இணையரின் ஆசை நிறைவேறாமல் போனது.

அந்த இணை 17-21, 14-21 என்று நேரடி செட்களில் தோல்வி அடைந்தது.

இறுதியாக, ஆடவர் இரட்டையர் பிரிவில், மான் வெய் சொங் - தீ காய் வுன் ஜோடியின் வழி மலேசியா வெற்றி பெற்றாலும், 2-3 எனும் புள்ளிகளோடு தற்போது பி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறுகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.