NATIONAL

தெக்கூனின் ஒதுக்கீட்டில் 143 தொழில்முனைவோருக்கு உதவி வழங்கப்பட்டது

10 பிப்ரவரி 2025, 5:39 AM
தெக்கூனின் ஒதுக்கீட்டில் 143 தொழில்முனைவோருக்கு உதவி வழங்கப்பட்டது

கோலாலம்பூர், பிப் 10: கடந்த ஜனவரி 14ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், தெக்கூனிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டில் 36 லட்சம் ரிங்கிட் இந்திய சமூகத்தை சேர்ந்த 143 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டது.

அத்தொகை SPUMI எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி மற்றும் SPUMI Goes Big திட்டம் வழி தெக்கூன் நிதிக்கு விண்ணப்பித்த தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டதாக தொழின்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அந்த 36 லட்சம் ரிங்கிட்டில் 5 லட்சத்து 55 ஆயிரம் ரிங்கிட் SPUMI Goes Big திட்டம் வழி 14 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டதாக ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 30 லட்சத்து 61 ஆயிரம் ரிங்கிட் SPUMI திட்டம் வழி 129 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது

10 கோடி ரிங்கிட் ஒதுக்கிட்டை விநியோகிக்கும் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு மாதமும் நடைபெறும் SPUMI மற்றும் SPUMI Goes Big கண்காணிப்பு கூட்டத்திற்கு தாம் தலைமை ஏற்கவிருப்பதாக அவர் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.