NATIONAL

மலேசியப் பிறப்பு பத்திரத்தைப் பயன்படுத்தி மைகார்ட் பெற்ற வெளிநாட்டு பெண் கைது

28 ஜனவரி 2025, 8:30 AM
மலேசியப் பிறப்பு பத்திரத்தைப் பயன்படுத்தி மைகார்ட் பெற்ற வெளிநாட்டு பெண் கைது

கோலாலம்பூர், ஜன 28 - வியாபாரம் ஒன்றை தொடங்குவதற்காக மலேசியப் பிறப்பு பத்திரத்தைப் பயன்படுத்தி மைகார்ட் பெற்ற, வெளிநாட்டு பெண் ஒருவரை குடிநுழைவுத் துறை கைது செய்தது.

குவாந்தானில் உள்ள குடிநுழைவு துறைக்கு, சோதனைக்காக வந்த அப்பெண் கைது செய்யப்பட்டதாக, தேசியப் பதிவு துறையின் அமலாக்க பிரிவு இயக்குநர் கைரு ஃபர்ஹாட் கூறினார்.

கைது செய்யப்பட்ட 36 வயதுடைய அப்பெண், இந்தோனேசியா, மேடானைச் சேர்ந்தவர் என்று சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.

இதனிடையே, குடிநுழைவு துறை சட்டம் செக்‌ஷன் 25-இன் கீழ் அப்பெண் மீதான குற்றம் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகளுக்கு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரிங்கிட் அபராத விதிக்கப்படலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.