NATIONAL

வெவ்வேறு வேலை நேர செயல்முறை, இன்னும் பரிந்துரையில் உள்ளது

17 ஜனவரி 2025, 9:40 AM
வெவ்வேறு வேலை நேர செயல்முறை, இன்னும் பரிந்துரையில் உள்ளது

புத்ராஜெயா, ஜன 17 - சுகாதாரத் துறை அரசு ஊழியர்களுக்கு டபல்யு.பி.பி எனப்படும் வெவ்வேறு வேலை நேர செயல்முறை இன்னும் பரிந்துரையில் உள்ளது.

அவ்விவகாரம் இன்னும் தொடக்க கட்டத்தில் உள்ளது. அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர்,டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

இந்த பரிந்துரை, கலந்துரையாடல் செயல்முறைக்கு உட்படுவதற்கு முன்னரே, அது குறித்த தகவல்கள் பரவலாகப் பகிரப்பட்டதற்கு தாம் வருந்துவதாகவும் டாக்டர் சுல்கிஃப்ளி குறிப்பிட்டார்.

''இது வெறும் பரிந்துரை மட்டுமே. அதன் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, ” என அவர் தெளிவுப்படுத்தினார்.

புத்ராஜெயாவில், பி40 மற்றும் எம்40யைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்7.

அனைத்து தரப்பினரின் நன்மைக்காக சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதை உறுதி செய்ய பங்குதாரர்கள் அனைவரும் இந்தச் செயல்முறையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் விளக்கினார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.