ஷா ஆலம், ஜன 2: ஜனவரி 4 முதல் 6 வரை திரங்கானு முழுவதும் தொடர்மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)
எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கிளந்தானில் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தனா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் புத்தே மற்றும் கோலா கிராய் ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பகாங்கில், ஜெராண்டூட், மாரான், குவாந்தான், பெக்கான், ரொம்பின் மற்றும் ஜோகூரில் மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் இதே வானிலைதான் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


