ஷா ஆலம், டிச.25- மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) டிசம்பர் இம்மாதம் 29 முதல் 31 வரை திரங்கானு முழுவதும் தொடர்ந்து மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் எச்சரிக்கை நிலையிலான தொடர் மழை கிளந்தான் மாநிலத்தின் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மச்சாங், பாசீர் பூத்தே மற்றும் கோல கிராய் ஆகிய மாவட்டங்களை தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 28 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் சபாவின் பல மாவட்டங்கள் எச்சரிக்கை மட்டத்தில் தொடர் மழையை எதிர்நோக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.







