கோலாலம்பூர், நவ 20: நிலம் உள்வாங்கம் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவின் ஒரு பகுதி பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் போலீஸ் சாவடி அருகிலுள்ள பகுதி உட்பட வணிக வளாகங்களுக்கு இடையிலான பாதை நவம்பர் 10 முதல் மீண்டும் திறக்கப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
"இந்த பகுதியில் நிலம் பழுதுபார்ப்பு பணிகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு இந்த வழி திறக்கப்பட்டது.
"இந்த பணிக் காலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் பொறுமை காத்து ஒத்துழைப்பை வழங்கியதற்காக டிபிகேஎல் நன்றியை தெரிவித்தது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விஸ்மா மெலாயு அருகே நிலம் உள்வாங்கும் சம்பவம் நடந்த இடமான கிரவுண்ட் ஜீரோ பகுதி, தொடர்ந்து பழுதுபார்க்கும் பணிகளுக்காக இன்னும் மூடப்பட்டுள்ளது என்று டிபிகேஎல் தெரிவித்துள்ளது.
"இந்தப் பணிகள் பாதுகாப்பாகவும், முழுமையாகவும் முடிக்கப்படுவதை உறுதிசெய்ய டிபிகேஎல் உறுதிபூண்டுள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
– பெர்னாமா








