NATIONAL

எஸ்பிஎம் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் உதவுகிறது

19 நவம்பர் 2024, 9:49 AM
எஸ்பிஎம் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெற சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் உதவுகிறது

ஷா ஆலம், நவ 19: எஸ்பிஎம் மாணவர்கள் சிறந்த முடிவுகளைப் பதிவுசெய்ய சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் (PTRS) உதவுகிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கடந்த 2022 இல் 4.80 ஆக இருந்த மாநிலத்தின் சராசரி தரம் (GPN) இத்திட்டம் மூலம் 4.67 ஆக தரம் உயர்த்தப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"இந்த திட்டத்தின் வெற்றி இரண்டு விஷயங்களின் மூலம் அளவிடப்படுகிறது, அதாவது குறைந்து வரும் GPN மற்றும் அதிகரித்து வரும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை ஆகும்.

"கூடுதலாக, 2023 இல் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை  91.14 சதவீதத்தை எட்டியது, இது முந்தைய ஆண்டில் 89.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது" என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் புக்கிட் லஞ்சன் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங்கின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இந்த ஆண்டு சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் மூலம் நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் மொத்தம் 130,000 பேர் பலன் அடைந்ததாக அமிருடின் தெரிவித்தார்.

மலாய், ஆங்கிலம், கணிதம், கூடுதல் கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டு வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டும் இதே எண்ணிக்கை மாணவர்களுடன் தொடரும் என்றார்.

வெள்ளிக்கிழமை மாநில பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அடுத்த ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்தம் RM 10 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக அமிருடின் அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.