கோலாலம்பூர், நவ 19: கடந்த வெள்ளியன்று புக்கிட் ஜாலில் விரைவுச் சாலையில் சிறுமி ஒருவர் மரணம் அடைந்து மற்றும் அவரது பெற்றோருக்கு காயம் ஏற்படுத்திய சாலை விபத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நேற்று கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைக்கு வந்தபோது,31 வயது ஓட்டுநர் கைது செய்யப் பட்டதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) தலைவர் ஏசிபி முகமட் சம்சுரி முகமட் இசா கூறினார்.
இரவு 9.50 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஹோண்டா பீட் மோட்டார் சைக்கிள் சந்தேக நபரின் காரால் மோதப்பட்டு குறிப்பிட்ட மூன்று நபர்களும் சாலையில் விழுந்தனர்.
“பாதிக்கப்பட்ட மூன்று பேரையும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர்களின் ஏழு வயது மகள் சிகிச்சை பயனளிக்காமல் இறந்துவிட்டார்.
"சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் குற்றவியல் வழிமுறைகளைப் பெறுவதற்கு விசாரணை ஆவணங்கள் எதிர்காலத்தில் மாநில வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்" என்று முகமட் சம்சுரி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முன்னதாக, இச்சம்பவம் சம்பந்தப்பட்ட 28 வினாடி வீடியோ முகநூலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா


