ஷா ஆலம், நவ. 19 - புக்கிட் லஞ்சான் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு டாமான்சாரா டாமாய் சமூக மண்டபத்தில் கடந்த 16ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 7.00 தொடங்கி 10.00 மணி வரை நடைபெற்றது.
இதில் சிறப்பு வருகையாளர்களாகப் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் மற்றும் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளரும் முன்னாள் செனட்டருமான சுரேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என மூவினத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சிறார்களுக்கு ஆங் பாவ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிர்ஷ்டக் குலுக்கு நடத்தப்பட்டு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய புவா பெய் லிங், இங்கு ஆண்டுதோறும் தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும். இருந்த போதிலும் இவ்வாண்டு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கைச் சற்று அதிகமாக உள்ளது.
குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்கு நாங்கள் நிச்சயமாக உதவிகளைச் செய்வோம். எங்கள் மையத்திற்கு வந்து உங்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறினால் அதற்கு ஏற்றாற் போல் நாங்கள் உதவி செய்வோம். தற்போது சிலாங்கூரில் பிங்காஸ் போன்ற சமூகத் திட்டங்களுக்கு எங்களின் மூலமாக நீங்கள் விண்ணப்பம் செய்துக் கொள்ளலாம்.
அண்மையில் புக்கிட் லஞ்சாங் பகுதியில் தீபாவளிக்கு முன்பாக 400 பேருக்கு ஷாப்பிங் செல்வதற்கான பற்றுச்சீட்டுகள், 400 பேருக்குத் தீபாவளிக்கான அன்பளிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டன.
தொகுதி அலுவலகத்தில் சிவலிங்கம் என்ற இந்திய பிரதிநிதி ஒருவர் பணியாற்றுகின்றார். அவரிடம் உங்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறினால் அதற்கான ஆலோசனைகளை அவர் வழங்குவார்.
அண்மையில் சிலாங்கூர் மாநில வரவுச் செலவுத் திட்டத்தில் மந்திரி புசார் அறிவித்ததைப் போல் மாணவர்களுக்கு வரும் 2025ஆம் ஆண்டில் நிறைய ஒதுக்கீட்டுத் தொகைகள் வழங்கப்படவிருக்கின்றன. இது வரவேற்கத்தக்க மற்றும் நல்ல ஒரு முடிவாகக் கருதப்படுகிறது. சிலாங்கூர் அரசாங்கம் சிறப்பாகச் செயல்படுத்துகிறது. திறமையானவர்கள் ஏராளமானோரை உருவாக்கும் பொருட்டு அடுத்தாண்டில் மிகச் சிறப்பான ஒதுக்கீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி பெருநாள் முடிவுற்ற பிறகும் நீங்கள் தொடர்ந்து அதைக் கொண்டாடி மகிழ்வதைப் பார்க்கும் போது சிறப்பாக இருக்கிறது. இங்கு சீனர்கள், மலாய்க்காரர்களும் இந்திய பாரம்பரிய உடையில் வந்திருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புவா பெய் லிங் குறிப்பிட்டார்.
இதே போல் பேசிய சுரேஷ் சிங், அனைவருக்கும் தமது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவருக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். மலேசிய மடானி அரசாங்கம் இந்தியர்களை ஒரு போதும் கைவிடாது. இந்தியர்களை இந்த அரசாங்கம் சிறப்பாக கவனிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அடுத்தாண்டில் நிறைய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்
டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள 200 பி40 குடும்பங்களுக்கு அண்மையில் கைத்தொழில் கற்றுக் கொடுக்கப்பட்டது.
அந்த வகையில் உங்களுக்கு என்ன பிரச்சனையாய் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வரலாம். உதவி செய்வதற்கு அதிகாரிகள் இருப்பதால் பிரச்சனைகளை எடுத்துக் கூறினால் உடனே நாங்கள் செய்வோம். இந்தியர்களைக் கை விட்டு விடக் கூடாது. அமைச்சர் கோபிந்த் சிங் நிச்சயமாக அனைத்தையும் செய்வார் என்றார்.
புக்கிட் லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங், புக்கிட் லஞ்சாங் மகளிர் பிரிவு, டாமான்சாரா டாமாய் இந்திய மகளிர் சங்கத்தைச் சேர்ந்த திருமதி அனிதா தேவி, இந்திய சமூகத் தலைவர் திரு. லோகநாதன் ஆகிய மூவரும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.


