NATIONAL

கடந்த ஆண்டு இன்ஃப்ராசெல் 28,290 சாலைகளை சீரமைத்தது

19 நவம்பர் 2024, 8:24 AM
கடந்த ஆண்டு இன்ஃப்ராசெல் 28,290 சாலைகளை சீரமைத்தது

ஷா ஆலம், நவ 19: கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 31 வரை மாநில சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ஃப்ராசெல்  சாலைகளில் இருந்த  28,290 குண்டு குழிகளை சரி செய்தது.

156 புகார்கள் (2023), 194 புகார்கள் (2022) மற்றும் 105 புகார்கள் (2021) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது,இவ்வாண்டு அதே காலகட்டத்தில் 276  சாலை சேதங்கள் மீதான புகார்களை பெற்றதாக  இன்ஃப்ராசெல் தெரிவித்துள்ளது.

அதில் கோலா சிலாங்கூர் (33,131), கிள்ளான் (18,237), சபாக் பெர்ணம் (15,982), பெட்டாலிங் (14,672), கோலா லங்காட் (14,038), உலு லங்காட் (9,225),சிப்பாங் (8,926), கோம்பாக் (4,571)மற்றும் உலு சிலாங்கூர் (1,826) ஆகியவை அடங்கும்

"இன்ஃப்ராசெல் சிலாங்கூர் மாநில பொதுப்பணி துறையுடன் இணைந்து பயனர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக சாலை உள்கட்டமைப்புகள்  தரமாக  இருப்பதை  உறுதி செய்ய தொடர்ந்து பாடுபடும்" என்று தெரிவிக்கப்பட்டது.

 X, #INFRASEL #NamaJalan #Daerah இல் ட்வீட்களைப் பதிவேற்றுவதன் மூலம் தொடர்ந்து புகார்களை அளிக்க மக்களை இன்ஃப்ராசெல் ஊக்குவிக்கிறது.

முன்னதாக, மெகா நடைபாதை திட்டத்தை செயல்படுத்த மொத்தம் RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.