NATIONAL

அனுமதியின்றி 4,000 கிலோ சமையல் எண்ணைய் வைத்திருந்த குற்றச்சாட்டை 11 இந்தோனேசியர்கள் ஒப்புக்கொண்டனர்

19 நவம்பர் 2024, 2:03 AM
அனுமதியின்றி 4,000 கிலோ சமையல் எண்ணைய் வைத்திருந்த குற்றச்சாட்டை 11 இந்தோனேசியர்கள் ஒப்புக்கொண்டனர்

காஜாங், நவ. 19- அட்டவணையிடப்பட்ட கட்டுப்படுத்தப் பட்ட பொருளான

சமையல் எண்ணெய்யை உரிய அனுமதியின்றி வைத்திருந்த

குற்றச்சாட்டை 11 இந்தோனேசிய ஆடவர்கள் ஒப்புக் கொண்டனர்.

உரிய ஆவணங்கள் இன்றி 4,000 கிலோ சமையல் எண்ணைய்யை

வைத்திருந்த தாக 20 முதல் 48 வயது வரையிலான அந்த 11 பேர் மீதும்

இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் ஜாலான் காஜாங்

ஜெயா 1, எனும் முகவரியிலுள்ள இலக்கமிடப்படாத வளாகத்தில்

தலைமறைவாக இருந்து வரும் ஆடவருடன் சேர்ந்த இக்குற்றத்தைப்

புரிந்தாக அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நீரூபிக்கப்பட்டால் பத்து லட்சம் வெள்ளிக்கும்

மேற்போகாத அபராதம், கூடுதல் பட்சம் மூன்றாண்டுச் சிறை அல்லது

இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1861ஆம் ஆண்டு விநியோக

கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 21வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 22(1)வது

பிரிவு, தண்டனைச் சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் அவர்கள் மீது

குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நிரந்தர முகவரியைக் கொண்டிராததோடு

அவர்கள் மலேசிய பிரஜைகள் அல்ல என்பதால் அவர்களுக்கு ஜாமீன்

வழங்கக் கூடாது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச்

செலவின அமைச்சின் விசாரணை அதிகாரி முகமது சைபுல் முன்னதாக

நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

வழக்கறிஞர் யாரும் பிரதிநிதிக்காத அந்த 11 பேரும் தங்கள் தரப்பில் மேல்

முறையீடைத் தாக்கல் செய்யவில்லை.

இவ்வழக்கு தொடர்பான இரசாயன அறிக்கை பெறுவதற்கும் தீர்ப்பு

வழங்குவதற்கும் ஏதுவாக நீதிபதி மசுவாலினா அப்துல் ரஷிட்

இவ்வழக்கை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.