NATIONAL

மகள் நீரில் மூழ்கினார்,தாய் உயிர் தப்பினார்

18 நவம்பர் 2024, 9:33 AM
மகள் நீரில் மூழ்கினார்,தாய் உயிர் தப்பினார்

ஈப்போ, நவ 18: நேற்று மதியம் சுங்கை ஆயர் பெரோக், ஜாலான் பாடாங் செதாங், கம்போங் கெருனை கெரிக் என்ற இடத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆற்றில் குளித்தகொண்டிருந்த 20 வயது பெண் ஒருவர் நீரில் மூழ்கினார், 48 வயதுடைய தாய் உயிர் தப்பினார்.

பாதிக்கப்பட்ட நூர் அரினா அஜிசான், பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப் பட்டதாக நம்பப்படுகிறது. தீயணைப்பு துறை வருவதற்கு முன் அப்பெண்ணின் தாயார் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார் என பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல்பாட்டு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மத் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு பிற்பகல் 3.11 மணிக்கு அழைப்பு வந்தது. பின், நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் பாதிக்கப்பட்டவர் மூழ்கிய இடத்திலிருந்து அருகிலுள்ள நீரின் மேற்பரப்பில் தேடல் நுட்பங்களைப் பயன்படுத்தி தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை மேற்கொண்டது.

எனினும் நேற்றிரவு 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை இன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொரடப்பட்டது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.