NATIONAL

நவம்பர் 23 வரை ஜோகூர், பகாங்கில் கடுமையான தொடர் மழை - வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

18 நவம்பர் 2024, 9:22 AM
நவம்பர் 23 வரை ஜோகூர், பகாங்கில் கடுமையான தொடர் மழை - வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ 18 -  இம்மாதம் 23ஆம் தேதி  சனிக்கிழமை வரை பகாங் மற்றும் ஜோகூரின் பல  பகுதிகளில் கடுமையான தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங் மாநிலத்தின்  குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின்  ஜோகூரில் உள்ள சிகாமாட், குளுவாங், மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகியவை  பாதிக்கப்படும் பகுதிகளாகும் என அது கூறியது.

இக்காலக்கட்டத்தில் கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, தானா மேரா, பாச்சோக், மச்சாங் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய பகுதிகளிலும் பகாங் மாநிலத்தின்  (ஜெரான்டூட், தெமர்லோ, மாரான், ஆகிய  பகுதிகளிலும்  இதே வானிலை நீடிக்கும் என அத்துறை இன்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

நவம்பர் 20ஆம் தேதி புதன்கிழமை  வரை மலாக்கா, நெகிரி செம்பிலான் (கோல பிலா, ஜெம்போல் மற்றும் தம்பின்), ஜோகூர் (தங்காக், மூவார், பத்து பஹாட், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு) ஆகிய இடங்களிலும் தொடர் மழை எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.