NATIONAL

ஷா ஆலம் அரங்கை இடிக்கும் பணி சீராக நடைபெறுகிறது -  மந்திரி புசார் தகவல்

18 நவம்பர் 2024, 8:31 AM
ஷா ஆலம் அரங்கை இடிக்கும் பணி சீராக நடைபெறுகிறது -  மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், நவ. 18 - ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் (கே.எஸ்.எஸ்.ஏ.) நிர்மாணிப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் சுமூகமாக நடந்து வரும் வேளையில்  அக்டோபர் 30ஆம் தேதி நிலவரப்படி 45.81 விழுக்காட்டுப் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக மந்திரி புசார் கூறினார்.

கடந்த ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்ட  பழைய அரங்கை உடைக்கும்  பணியை உள்ளடக்கிய முதல் கட்டத்தின் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அடைவு நிலையைக் கண்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய முதல் கட்டப் பணிகள்  அடுத்தாண்டு ஜூன் இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வரை 45.81 சதவீத முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

ஒருங்கிணைந்த அரங்கம், பார்க்கிங் பிளாசா, பொழுதுபோக்கு பகுதி மற்றும் பயிற்சிக் களம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஷா ஆலம் அரங்கின் முதல் கட்டம் 2027 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

உள்ளரங்க தியேட்டர் கட்டிடம், வணிக இடம், விளையாட்டு மற்றும் இளைஞர் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட கட்டுமானம் 2027 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கி 2029 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

மூன்றாம் கட்டமாக ஒரு ஹோட்டல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 2028 முதல் 2030 வரை இதன் பணிகள் மேற்கொள்ளப்படும்  என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் கோம்பாக் செத்தியா உறுப்பினர்  ஹில்மான் இடாமான் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் செயல்படும் இலகு இரயில்  3 (எல்ஆர்டி 3) கதிட்டத்திறாகு  இடமளிக்கும் வகையில்  ஆரம்ப கட்டத்தில் பெரிய அளவில் அரங்க  இடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

அரங்க இடிப்புப் பணியை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால்  கே.எஸ்.எஸ்.ஏ. கட்டுமானப் பணியின் முதல் கட்டப் பணிகளை மேலும் கடினமாக்கிவிடும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.