NATIONAL

செபாக் தக்ரோ மைதானம் அமைக்கும் திட்டம் குறித்து மாநில அரசு ஆலோசனை

18 நவம்பர் 2024, 6:51 AM
செபாக் தக்ரோ மைதானம் அமைக்கும் திட்டம் குறித்து மாநில அரசு ஆலோசனை

கோலா சிலாங்கூர், நவ. 18: சிலாங்கூரில் செபாக் தக்ரோ மைதானம் அமைக்கும் திட்டம் குறித்து மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக டத்தோ மந்திரி புசார் தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவை விரிவாக செம்மைப்படுத்த சிலாங்கூர் செபாக் தக்ரோ சங்கத்திடம் (PSS) சமர்ப்பிக்கப் பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"PSSக்கு ஏதாவது திட்டம் இருந்தால், அவர்கள் அதை சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலுடன் (MSN) விவாதிக்கலாம். மாநில அரசாங்கத்தின் தரப்பில் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் தயாராக உள்ளோம்.

"சமீபத்தில் ஜோகூர் கிராண்ட் பிரிக்ஸ், எமாஸ் அனுவார் மலேசியன் செபாக் தக்ரோ லீக் (STL) போட்டியில் சிலாங்கூர் பிஸ்டன்ஸ் அணி மூன்றாவது இடத்தைப் பெற்றது. இதன் மூலம் இந்த விளையாட்டில் மாநிலத்தின் நிலையை மீண்டும் வலுப்படுத்தியது," என்று அவர் கூறினார்.

முன்னதாக,சிறப்பு செபாக் தக்ரோ அரங்கம் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டப்பட வேண்டும் என்று மலேசியா செபாக் தக்ரோ சங்கத்தின் (பிஎஸ்எம்) தலைவர் முன்மொழிந்தார்.

விளையாட்டை நடத்துவதற்கு அல்லது பயிற்சி பயன்பாட்டிற்காக அரங்கம் தேவை என டத்தோ சுமாலி ரெடுவான் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.