கோலாலம்பூர், நவ. 18: நேற்று ஜாலான் லிங்கரான் தெங்கா 2 (எம்ஆர்ஆர்2) என்ற இடத்தில் ஐந்து டன் எடை கொண்ட லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் உட்பட 11 வாகனங்கள் மீது மோதியதில் ஒரு பெண் உட்பட 3 பேர் லேசான காயமடைந்தனர்.
பிற்பகல் 3.09 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி இயக்குனரான அகமட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் உள்ளூர் குடிமக்கள் மற்றும் 43 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மலேசிய சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
"செலாயாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை(பிபிபி)சேர்ந்த மொத்தம் ஏழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
பிற்பகல் 4.43 மணியளவில் மீட்பு பணி நிறைவடைந்ததாக அகமட் முக்லிஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
- பெர்னாமா


