ஜெர்தே, நவ. 18 - இரு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் பெண்மணி
ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாகினர்.
இச்சம்பவம் திரங்கானு-கம்போங் ராஜா சாலையில் கம்போங் பெத்திங்
லிந்தாங் அருகே நேற்று மாலை 3.00 மணியளவில் நிகழ்ந்தது.
ஹோண்டா சிட்டி காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நோரா ஜபிடா
அகமது ஜபிடின் (வயது 45) தலையில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள்
காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பெசுட் மாவட்ட
இடைடக்கால போலீஸ தலைவர் துணைப் சூப்ரிண்டெண்டன் முகமது
சானி முகமது சாலே கூறினார்.
உயிரிழந்த பெண்ணின் உறவினரான 62 வயது ஆடவர் மேலும் இரு
பயணிகளோடு திரங்கானுவிலிருந்து கிளந்தான் மாநிலத்தின் பாச்சோக்
நோக்கி ஹோண்ட சிட்டி காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த
விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது எதிரே வந்த 26 வயது ஆடவர் ஒட்டிய
பெரேடுவா மைவி ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்தடத்தில்
நுழைந்து ஹோண்டா சிட்டிக் காரை மோதியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் ஹோண்டா சிட்டி காரில் பயணித்த பெண்மணி சம்பவ
இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மைவி காரின் ஓட்டுநர் தலை
மற்றும் வயிற்றில் பலத்த காயங்களுக்குள்ளானார். அக்காரிலிருந்து
மேலும் இருவருக்கும் காயம் ஏற்பட்டது என்றார் அவர்.
இவ்விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் பெசுட் மருத்துவமனையின்
தடயவியல் பிரிவுக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில்
காயமடைந்தவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பெரேடுவா மைவி காரின் ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர்ச்
சோதனையில் அவர் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளைப்
பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் மேலும்
சொன்னார்.


