NATIONAL

சண்டையில் உள்ளூர் ஆடவரின் இடது கண்ணில் பலத்த காயம் - வெளிநாட்டு ஆடவர் கைது

17 நவம்பர் 2024, 8:58 AM
சண்டையில் உள்ளூர் ஆடவரின் இடது கண்ணில் பலத்த காயம் - வெளிநாட்டு ஆடவர் கைது

தாசேக் கெளுகோர், நவ. 17: நேற்று ஜாலான் அராகூடாவில் நடந்த சண்டையில், உள்ளூர் ஆடவரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதன் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார்.

மதியம் 2 மணியளவில் நடந்த சண்டையைத் தொடர்ந்து 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார் என பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அஹமட் கூறினார்.

"ஆரம்ப விசாரணையில் 52 வயதான பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. ஆகவே, சந்தேக நபர் அவரை தாக்கி இரு கண்களையும் காயப் படுத்தினார்," என்று ஹம்சா அஹமட் கூறினார்.

மேல் சிகிச்சைக்காக அந்த நபர் கெப்பாலா பதாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் வழக்கு தண்டனை சட்டம் 325 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.