ஷா ஆலம், நவ. 17: ஓராங் அஸ்லி சமூகத்தினரின் நலனுக்காக, குறிப்பாக அவர்களின் வீடுகளை பழுது பார்ப்பதற்காக மாநில அரசு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.
தற்போதைய நவீனத்துவத்தில் ஓராங் அஸ்லி சமூகம் நல்வாழ்வை பெறுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சிலாங்கூர் பட்ஜெட் 2025ஐ முன்வைக்கும் போது,"சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஓராங் அஸ்லி சமூகத்தின் வளர்ச்சி எப்போதும் வலுப்பெற்று வருகிறது என அவர் கூறினார்.
கேரி தீவில் உள்ள மஹ் மேரி கலாச்சார கிராமத்தில் தனித்துவத்தை பராமரிக்கும் அதே வேளையில் வசதிகளை மேம்படுத்த மாநில அரசு RM1 மில்லியன் ஒதுக்கியது.
சிலாங்கூரின் வருகையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக கேரி தீவில் உள்ள மஹ் மேரி கலாச்சார கிராமம் உள்ளது என்று அமிருடின் கூறினார்.
"இருப்பினும், குறிப்பாக சுற்றுலா அல்லது பண்டிகை விடுமுறை நாட்களில், அதிகமான சுற்றுலாப் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், இப்பகுதி சிக்கலை எதிர்நோக்குவதாக இந்த நிர்வாகம் கண்டறிந்துள்ளது," என்று அவர் கூறினார்


