புத்ராஜெயா, நவ 17: நவம்பர் 10 அன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1இல் உள்ளூர் பயணிகளுக்கும் விமான நிறுவன ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செக்-இன் தாமதமாகியதாக நம்பப்படுகிறது.
விமான நிறுவன ஊழியரிடமிருந்து இந்த சம்பவம் தொடர்பான புகாரை காவல்துறை பெற்றதாக KLIA மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் அஸ்மான் ஷரியாட் கூறினார்.
"தவறான புரிதலின் விளைவாக, சிறிய சண்டை ஏற்பட்டது மற்றும் இதனால் விமான ஊழியர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
எந்த ஒரு பொய்யான தகவல்களையும் பரப்பவோ அல்லது பதிவேற்றவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் படுவதாக அஸ்மான் கூறினார். ஏனெனில் இதுபோன்ற நடவடிக்கைகள் குற்றவியல் சட்டத்தின் 500 வது பிரிவின் கீழ் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் விசாரிக்கப்படலாம்.
முன்னதாக, KLIA டெர்மினல் 1இல் இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட சண்டை சம்பவத்தை காட்டும் 25 வினாடி வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா


