NATIONAL

உலக பொருளாதார மந்த நிலை மற்றும் சீன பொருளாதார இறங்கு முகம் நம்மை பாதிக்க கூடும்

15 நவம்பர் 2024, 10:11 AM
உலக பொருளாதார மந்த நிலை மற்றும் சீன பொருளாதார இறங்கு முகம் நம்மை பாதிக்க கூடும்

ஷா ஆலம், நவ 15: வரவிருக்கும் நிதியாண்டுக்கான பொருளாதார போக்கை நாம் பட்டியலிடுகையில், அது  உலகளாவிய, பிராந்தியத்திய, தேசிய பொருளாதார  நகர்வுகள் நமது மாநில தன்மையையும் ஆட்கொள்ளும், முக்கியமாக  இவை அனைத்தும்  சிலாங்கூர் பொருளாதாரத்துடன்  அதிகம் பின்னி பிணைந்துள்ளது என எச்சரித்தார்.

உலக வங்கியின் கூற்றுப்படி, உலக மொத்த GDP  உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மிதமாக உள்ளது. அது 2024 ஆம் ஆண்டில் 2.6% உள்ளது. 2025-2026 ஆம் ஆண்டில் 2.7 ஆக  உயரக் கூடும்.

அதே வேளையில் உலக பொருளாதார அவுட்லுக் அக்டோபர் 2024 அறிக்கையின்படி, அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும்  அழுத்தங்கள் காரணமாக, உலகளாவிய பணவீக்க விகிதம் 4.3 சதவீதமாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உலக வங்கியின் கூற்றுப்படி, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா,  எதிர்பார்த் 4.8 % விட மெதுவான வளர்ச்சி 2025  அனுபவிக்கும் என்பதால், இந்த மந்த நிலை ஓரளவு நம்மையும் பாதிக்க ஒரு காரணமாகலாம் என்றார்.

காரணம்   தொற்று நோய்க்கு பிந்தைய சீரற்ற மீட்ச்சி, ரியல் எஸ்டேட் துறையில் உள்ள சவால்கள் தொடர்ச்சியான மற்றும் பலவீனமான உலகளாவிய தேவைகளும்   பொருளாதாரத்தை  பாதித்துள்ளது.

சீனாவின் பொருளாதாரத்தின் மந்தநிலை ஆசியாவை பாதிக்கிறது,  மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றான, சீனாவின் ஏற்றுமதிகளுக்கான தேவை குறைந்தது, குறிப்பாக இந்தத் துறையில் மின்னணு மற்றும் பொருட்கள், பொருளாதாரத்திற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன.

ஆகவே பிராந்திய, பொருளாதார செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகள் போன்றவை, இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி அடைவை  2025 ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாக்கும்  என்று ஆசிய வளர்ச்சி வங்கி   (ADB)எதிர்பார்க்கிறது என்றும் பட்ஜெட்டில்  எச்சரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.