NATIONAL

சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2025 பட்ஜெட்டில் வெ.5 கோடி ஒதுக்கீடு

15 நவம்பர் 2024, 9:25 AM
சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2025 பட்ஜெட்டில் வெ.5 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ. 15 - மாநிலத்திலுள்ள சாலைகளைத் தரம் உயர்த்தும்

நோக்கிலான மெகா சாலை சீரமைப்புத் திட்டம் 5 கோடி வெள்ளி நிதி

ஒதுக்கீட்டில் அடுத்தாண்டும் தொடரப்படவுள்ளது.

பொது மக்களின் உயிருக்கு ஆபத்தையும் சீரான போக்குவரத்துக்கு

இடையூறையும் ஏற்படுத்தக்கூடிய சாலை பழுதுகள் தொடர்பான மக்களின்

புகார்களை கவனிப்பதில் மாநில அரசு அதிக அக்கறை காட்டுகிறது என்று

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் மாநில அரசு மெகா சாலை சீரமைப்புத்

திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த 2023ஆம் ஆண்டு

5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்ட வேளையில் கடந்தாண்டு 2 கோடி வெள்ளி

ஒதுக்கப்பட்டது என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம்

ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர்

சொன்னார்.

இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடரும் வகையிலும் திட்ட அமலாக்க

ஆற்றலை அதிகரிக்கும் நோக்கிலும் அடுத்தாண்டு வரவு செலவுத்

திட்டத்தில் இப்பணிகளை மேற்கொள்வற்கு 5 கோடி வெள்ளியை மாநில

அரசு ஒதுக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

சாலை பராமரிப்பு மற்றும் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை

உள்ளடக்கிய மெகா சாலை சீரமைப்புத் திட்டத்தை மாநில அரசு

கடந்தாண்டு 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொண்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.