NATIONAL

பூலாவ் இண்டா மின் நிலையம் 2025 முதல் காலாண்டில் செயல்படத் தொடங்கும்

15 நவம்பர் 2024, 8:57 AM
பூலாவ் இண்டா மின் நிலையம் 2025 முதல் காலாண்டில் செயல்படத் தொடங்கும்

ஷா ஆலம், நவ. 15 - பூலாவ் இண்டா மின் உற்பத்தி நிலையம் வரும் 2025

முதல் காலாண்டில் செயல்படத் தொடங்கும். கிள்ளான் பள்ளத்தாக்கில்

அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை இந்த நிலையம் ஈடு செய்யும்

என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மொத்தம் 1,200 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல்

கொண்ட இந்த மின் நிலையம கிள்ளான் பள்ளத்தாக்கின் 45 விழுக்காட்டு

மின் தேவையை ஈடு செய்யும் அதே வேளையில் தீபகற்ப மலேசியாவுக்கு

தேவைப்படும் அதிகப்படியான மின் தேவையை நிறைவு செய்வதில்

உதவியாகவும் இருக்கும் என்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்

திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் சொன்னார்.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டில் கரியமிலவாயு வெளியேற்றத்தை 45

விழுக்காடாக குறைக்கும் தேசிய இலக்கை அடைவதில் இந்த மின்

உற்பத்தி நிலையம் முக்கியப் பங்கினை ஆற்றுகிறது என்று அவர் மேலும்

தெரிவித்தார்.

இந்த மின் உற்பத்தி நிலையம் செயல்படத் தொடங்கியவுடன் அது வீடுகள்

மற்றும் தொழில்துறைகளுக்கு மின்சக்தியை வழங்கும் அதேவேளையில்

பூலாவ் இண்டா மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக

வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

மாநில அரசின் துணை நிறுவனமான வோர்ல்ட் வைட் ஹோல்டிங்ஸ்

பெர்ஹாட் நிர்வகித்து வரும் இந்த மின் உற்பத்தி நிலையம் 4,090

மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை உற்பத்தி செய்வதாகவும் அவர்

சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.