ஷா ஆலம், நவ. 15 - செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) இன்குபேட்டர்
மேம்பாட்டு மையத்தை சிலாங்கூர் அரசு அமைக்கவிருக்கிறது. ஏ.ஐ.
தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மற்றும் சான்றிதழ் பணிகளை
மேற்கொள்ளும் நோக்கில் இம்மையம் அமைக்கப்படுகிறது.
இந்த மையத்தை சிலாங்கூர் அனைத்துலக புத்தாக்கத்திற்கான ஆற்றல்
மையத்தின் வாயிலாக எஸ்.டி.டி.சி. எனப்படும் சிலாங்கூர் தொழில்திறன்
மேம்பாட்டு மையம் நிர்வகிக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி சொன்னார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏ.ஐ. முன்னெடுப்புக்கான மொத்த ஒதுக்கீடு 50 லட்சம் வெள்ளியாகும்.
ஏ.ஐ.நுழைவாயிலில் நுழைவதற்கு சிலாங்கூரை தயார் படுத்த
எடுக்கப்படும் முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.


