ஷா ஆலம், நவ. 15 – சிலாங்கூர் மாநில அரசின் 2025 வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று மாலை 3.00 மணிக்குத் தாக்கல் செய்தார்.
மாநில அரசு தலைமைச் செயலகத்தின் அனெக்ஸ் கட்டிடத்தில் உள்ள சட்டமன்றத்தில் நடைபெறும் இந்த வரவு செலவுத் திட்டத் தாக்கலில் திருக்குர்ஆன் புனித வாசகத்தை வாசித்து, அதை மேற்கோள் காட்டி அதன்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது என்றார் மந்திரி புசார்.
ஆகவே, நம் பொறுப்பின் சுமை எவ்வளவு கனமானது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எனவே, நாம் எவ்வளவு பெரிய நம்பிக்கையைக் சுமக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். நமது செயல்பாடுகள் உலகளவில் நற்குணத்தை வளர்க்க எவ்வளவு இன்றியமையாதது என்பதை நினைவுறுத்தினார்.
அத்தகைய குறிக்கோள்கள் அல்லது குறிக்கோள்களின் அடிப்படையில், .சிலாங்கூர் மாநில பட்ஜெட் 2025 ஆவணத்தை நாம் வடிவமைக்கிறோம் . இந்த பட்ஜெட் ஆவணம் வெறுமனே ஒரு இயந்திர கையேடு, ஆவி இல்லாதது, ஆன்மா இல்லாத ஒரு வெற்று காகிதமாக எடுத்துக் கொள்ளாமல் , இந்த மாநில மக்களின் ஆணை, ஆசை , எதிர்பார்ப்பு , மாநிலத்தின் எதிர்காலம் என மாநில வரவு செலவுத் திட்டம் மதிப்பு அளிக்கப்பட வேண்டும், அதன் வரையறைகள் படி மாநிலம் வழி நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி.


