ஈப்போ, நவ.14: நேற்று லுமுட் அருகே அமைந்துள்ள மஞ்சூங்கில் உள்ள குவாரியில் பாறையில் அடிபட்டு குவாரி தொழிலாளி ஒருவர் இறந்தார்.
35 வயதுடைய உள்ளூர் நபர் மாலை 4.45 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பேராக் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் (ஜேகேகேபி) இயக்குநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
"பாதிக்கப்பட்டவர் வேலை செய்யும் இடத்தில் விழுந்த குவாரி கல்லால் நசுக்கப் பட்டார்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை குவாரியில் சம்பவம் நடந்த பகுதியில் உடனடியாக பணி நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 இன் கீழ் விதிமீறல் இருந்தால்,சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை ஜேகேகேபி பேராக் எடுக்கும்
- பெர்னாமா


