ஈப்போ, நவ 15: கடந்த வாரம், தாமான் புத்ரி லிண்டுங்கன் பிந்தாங்கில் உள்ள வீடொன்றில் வேலையில்லாத ஒருவர் தனது உறவினர் பெண்மணியை கொலை செய்ததாக இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
லீ ஹாவ் யி (21), மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, அந்நபர் அதற்கு தலையசைத்தார். ஆனால் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை .
நவம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் நவம்பர் 10 ஆம் தேதி காலை 8.25 மணி வரைக்குள் 54 வயதான லீ ஹூய் டிங்கைக் கொன்றதாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த குற்றம், குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் கொண்டுவரப்பட்டது.
பிரிவு 302, மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அல்லது 40 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மற்றும் மரண தண்டனை விதிக்கப் படாவிட்டால் குறையாமல் 12 பிரம்படி விதிக்கப்படும்.
மாஜிஸ்திரேட் சித்தி நோரா ஷெரீப், இந்த வழக்கை அடுத்த பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை,ஒரு பெண்ணின் சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து 21 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
– பெர்னாமா


