NATIONAL

உலகில் நீரிழிவு நோய் பாதிப்பு நான்கு மடங்கு அதிகரிப்பு - அதிகம் பாதித்த நாடுகளில் மலேசியாவுக்கும் இடம்

14 நவம்பர் 2024, 9:04 AM
உலகில் நீரிழிவு நோய் பாதிப்பு நான்கு மடங்கு அதிகரிப்பு - அதிகம் பாதித்த நாடுகளில் மலேசியாவுக்கும் இடம்

மாஸ்கோ, நவ 14 - கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 318 விழுக்காடு அதிகரித்து 82 கோடி பேராக உயர்வு கண்டுள்ளது  என்று என்.சி.டி. இடர் காரணி கூட்டமைப்பு (NCD-RisC) கூறியது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 82.8 கோடி பெரியவர்கள் (18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 63 கோடி பேராக மட்டுமே  இருந்தது என்று லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.

அண்மைய ஆண்டுகளில்  பெண்களிடையே நீரிழிவு நோய் பாதிப்பு 131 நாடுகளிலும்  ஆண்களிடையிலான பாதிப்பு   155 நாடுகளிலும்  அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், நீரிழிவு சிகிச்சையின் அளவு முறையே 118 நாடுகளில் பெண்களுக்கும் 98  நாடுகளில்    ஆண்களுக்கும் அதிகரித்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகிலேயே மிகக் குறைவான பாதிப்பு மேற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருபாலருக்கும், ஜப்பான் மற்றும் கனடாவில் பெண்களுக்கும் இருந்ததை 2022 ஆம் ஆண்டு தரவுகள் காட்டுகின்றன.

பாலினேசியா மற்றும் மைக்ரோனேசியாவில் உள்ள நாடுகள், கரீபியன் மற்றும் சில  மத்திய கிழக்கு நாடுகள்,  வட ஆப்பிரிக்கா, அத்துடன் பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.