NATIONAL

51 கிலோவுக்கு மேல் எடையுள்ள போதை பொருள் மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் - மூவர் கைது

14 நவம்பர் 2024, 8:47 AM
51 கிலோவுக்கு மேல் எடையுள்ள போதை பொருள் மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் - மூவர் கைது

தஞ்சோங் மாலிம், நவ.14: கடந்த திங்கட்கிழமை சிலிம் ரிவர் அருகே உள்ள சிலிம் பெர்டானா பிசினஸ் சென்டர்,தாமான் ஸ்ரீ ஜெயா என்ற இடத்தில்  ஒரு தம்பதியர் சென்ற காரில் 51 கிலோவுக்கு மேல் எடையுள்ள மெத்தாம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் போதை பொருள் அடங்கிய 50 பிளாஸ்டிக் பொட்டலங்களைக் கண்டுபிடித்து மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தேக நபரின் வாடகை புரோட்டான் ப்ரீவ் காரை, பேராக் மற்றும் பெர்லிஸ் குற்றப் புலனாய்வுத் துறை குழுவின் ஒத்துழைப்புடன் வாகன நிறுத்துமிடத்தில் பிற்பகல் 3.35 மணியளவில் தடுத்து நிறுத்தப் பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் டத்தோ ஸ்ரீ காவ் கோக் சின் கூறினார்.

போதைப் பொருள் டிரான்ஸ்போர்ட்டர்களாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் 25 முதல் 27 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர், அவர்கள் வாகனத்தில் பூட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸில் மெத்தாம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் பவுடர் மற்றும் கிரிஸ்டல்கள் அடங்கிய 50 பிளாஸ்டிக் பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தனர்.

"" பறிமுதல் செய்யப்பட்ட 51.97 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு 2 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து போதைப் பொருள்களை கடத்துவதும், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள உள்ளூர் சந்தைக்கு சாலை வழியாக விநியோகிப்பதும் சிண்டிகேட்டின் செயல்பாடாகும் என்றார்.

25 வயதுடைய முதல் சந்தேக நபர் ஒவ்வொரு விநியோகத்திற்கும் RM2,000 கூலியாகப் பெற்றதாகவும், 27 வயதுடைய மூன்றாவது சந்தேக நபருக்கு RM100 மட்டுமே ஊதியம் கிடைத்ததாகவும் காவ் கூறினார்.

கடந்த ஜனவரி முதல் சிண்டிகேட் செயல்பட்டதாகவும், முதல் சந்தேக நபருக்கு மட்டுமே கடந்தகால குற்றப்பதிவு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர்கள் அனைவரும் நவம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவ் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.