NATIONAL

சமூகமான அதிகார மாற்றத்திற்கு ஜோ பைடன்- டிரம்ப் இணக்கம்

14 நவம்பர் 2024, 8:06 AM
சமூகமான அதிகார மாற்றத்திற்கு ஜோ பைடன்- டிரம்ப் இணக்கம்

வாஷிங்டன், நவ.14 - அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்  அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டோனால்ட் டிரம்பும் நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஓவல் அலுவலகத்தில்  நடைபெற்ற இச்சந்திப்பின் போது வாழ்த்துக்கள்,

நாங்கள் சொன்னது போல் ஒரு சுமூகமான அதிகார மாற்றத்திற்கு காத்திருக்கிறோம் -  எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தயாராக  இருக்கிறோம் என்று டிரம்பிடம் பைடன்  கூறினார்.

அதிபர் தேர்தலில்   இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற டிரம்ப்,  பைடனுக்கு நன்றி தெரிவித்ததோடு அரசியல் "கடுமையானது" என்றும் கூறினார்

பல சந்தர்ப்பங்களில் உலகம்  மிகவும் இனிமையானதாக  இல்லை. ஆனால் இது இன்று ஒரு இனிய உலகம்.  நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். மிகவும் சுமூகமான ஒரு மாற்றம். அது பெறக்கூடிய அளவுக்கு சுமூகமானதாக இருக்கும். அதை நான் மிகவும் பாராட்டுகிறேன் என்று டிரம்ப் தெரிவித்தார்

செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். ஆனால், அவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டிரம்பிற்கு எதிரான அதிபர் தேர்தல்  விவாதத்தில் மோசமான பின்னடைவை எதிர்நோக்கிய பைடன் போட்டியிலிருந்து விலகினார்.

கடந்த  நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றத்  தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை பைடன் ஆதரித்தார்.

அதிபர்  தேர்தலில்  குடியரசுக் கட்சி பெரும்பான்மையை வென்றது. பிரதிநிதிகள் சபை, செனட் மற்றும் வெள்ளை மாளிகையின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது. டிரம்ப் 312 தேர்தல் வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.