NATIONAL

முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

14 நவம்பர் 2024, 3:48 AM
முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

கோலாலம்பூர், நவ.14 - முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில் டையிம் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் சேவையை அரசாங்கம் மதிக்கிறது என்றார்.

“பெருவில் உள்ள லீமாவுக்கு வந்தவுடன் துன் டாயிம் சைனுடின் காலமானார் என்ற செய்தி கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

நேற்று காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் 8.21 மணியளவில் டாயிம் இறந்தார்.

அவர் 1984 முதல் 1991 வரை மற்றும் 1999 முதல் 2001 வரை நிதி அமைச்சராக இருந்தார்.

நேற்று, அசார் தொழுகைக்குப் பிறகு புக்கிட் கியாரா 1 கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.