சிபு, நவ 14: இணைய வணிக மோசடியால் ஏமாற்றப்பட்ட முதியவர் RM136,000 ஐ இழந்தார் என்று சிபு மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி தெரிவித்தார்.
வேலையில்லாத 60 மதிப்புதக்க பாதிக்கப்பட்டவர், அக்டோபர் 9 ஆம் திகதி அன்று வாட்ஸ்அப் செயலி மற்றும் முகநூல் மூலம் குறிப்பிட்ட இணைய வணிகத்தை பற்றி தெரிந்து கொண்டார்.
"அதில் பாதிக்கப்பட்டவருக்கு லாபம் ஈட்டுவதற்கு முன்கூட்டியே மூலதனத்தை வழங்கும் நிபந்தனையுடன் பிராண்டட் ஒப்பனைப் பொருட்களை இணையத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கான வணிக வாய்ப்பு வழங்கப்பட்டது.
"அச்சலுகையால் ஈர்க்கப் பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் கூறிய பிறகு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்,`` என்று சுல்கிப்லி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
அக்டோபர் 13 முதல் நவம்பர் 7 வரை, பாதிக்கப்பட்டவர் 11 உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு 32 பணப் பரிமாற்ற பரிவர்த்தனைகளைச் செய்துள்ளதாக அவர் கூறினார்.
நவம்பர் 10 ஆம் தேதி, பாதிக்கப் பட்டவரின் விண்ணப்பம் முடக்கப் பட்டதாகக் கூறப்பட்டு, RM70, 000 கூடுதலாக செலுத்துமாறு கேட்கப்பட்டது.
"பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர் இறுதியாக சிபு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) புகார் செய்ததாகவும் மற்றும் இந்த வழக்கு குற்றவியல் சட்டப்பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
– பெர்னாமா


