NATIONAL

பிரதமர் அன்வாருக்கு பெரு நாட்டின் உயரிய விருது - அதிபர் டினா எர்சில்லா வழங்கினார்

14 நவம்பர் 2024, 2:26 AM
பிரதமர் அன்வாருக்கு பெரு நாட்டின் உயரிய விருது - அதிபர் டினா எர்சில்லா வழங்கினார்

லீமா (பெரு), நவ. 14 - பெரு நாட்டின் மிக உயரிய ஆர்டர் ஆஃப் சன் ஆஃப்

பெரு அல்லது “எல் சோல் டெல் பெரு“ எனும் விருது வழங்கி

கௌரவிக்கப்பட்டுள்ளார். அரசு மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்

இந்த விருதை பெரு அதிபர் டினா எர்சில்லா பொலுவார்டே ஸெகேரா

வழங்கினார்.

இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாக

பிரதமர் அன்வார் கூறினார். கடந்த 1821ஆம் ஆண்டு ஸ்பெயின்

நாட்டிடமிருந்து சுதந்திரம் பெற்றப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மிக

உயரிய விருது இதுவென என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க

கண்டத்தின் மிக பழைமை வாய்ந்த பொது விருதாக இது கருதப்படுகிறது

என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மற்ற அங்கீகாரங்களைப் போல் இந்த

விருதையும் நான் ஏற்றுக் கொண்டேன். மலேசிய மக்களின் சார்பாக இந்த

விருதை நான் பெறுகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின்

அடையாளமாக இந்த விருதை நான் பார்க்கிறேன் என்றார் அவர்.

இலகுவாக கருத முடியாத சில பழக்கவழக்கங்களை பெரு நாடு

கொண்டுள்ளது. மலேசியாவைப் போல் பல்லின மக்களையும்

கலாசாரத்தை அந்நாடு கொண்டிருப்பதோடு மலேசியாவுக்கு இணையான

பல்வகை சூழியல் முறையில் துரித வளர்ச்சியும் கண்டு வருகிறது என்று

அவர் சொன்னார்.

புவி அரசியல் மற்றும் பொருளாதார போட்டித் தன்மையில் அதிகரித்து

வரும் மாற்றங்களுக்கு தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள இரு

நாடுகளும் முயன்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகம், முதலீடு மற்றும் தெற்கு உலக நலன்களை ஊக்குவிப்பதில்

இரு நாடுகளும் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள்

உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.