கோலாலம்பூர், நவ. 13 - தேசம், இனம் மற்றும் சமயப் போராட்டத்தில்
தம்முடன் துணை நின்ற உண்மையான சகாவை தாம் இழந்து விட்டதாக
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஜைனுடின் மறைவு தொடர்பில்
தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அனுதாபச் செய்தியில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
துன் டாயிமின் மறைவை அறிந்து ஆழ்ந்த துயரம் கொண்டேன். நாங்கள்
இருவரும் மீண்டும் ஒரு முறை சந்திப்பதற்கு இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் என்ற அவர் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா, அசுந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
துன் டாயிம் (வயது 86), இன்று காலை 8.21 மணியளவில் உயிரிழந்ததாக
அவரின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றில் கூறினர்.
சே அப்துல் டாயிம் ஜைனுடின் எனு இயற்பெயரைக் கொண்ட டாயிம்,
கடந்த 1984 முதல் 1991 வரையிலும் 1999 முதல் 2001 வரையிலும்
நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார்.


