NATIONAL

சபாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமை  உள்ளதா? சூலு தரப்பின் கூற்று அர்த்தமற்றது- அசாலினா சாடல்

13 நவம்பர் 2024, 5:24 AM
சபாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமை  உள்ளதா? சூலு தரப்பின் கூற்று அர்த்தமற்றது- அசாலினா சாடல்

கோலாலம்பூர், நவ. 13 - சீனா அல்லது பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு குத்தகைக்கு விடுவது உட்பட சபாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு  சுதந்திரம் உள்ளது என்ற சுலு தரப்பின் கூற்று அர்த்தமற்றது என்று பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார்.

கடந்த  1957ஆம் ஆண்டு  சுதந்திரம் பெற்ற, இறையாண்மை கொண்ட நாடான மலேசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சபா இருப்பதால் இந்தக் கோரிக்கையை அரசாங்கம்  எதிர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.

பிரெஞ்சு உச்ச நீதிமன்றத்தில் மலேசியாவுக்கு கிடைத்த வெற்றியை "சுய தோல்வி" என்று விவரித்த  சூலு தரப்பின் முன்னணி வழக்கறிஞர் பால் கோஹன்,  சபாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனது கட்சிக்காரருக்கு முழு  சுதந்திரம் உள்ளது என்று வாதிட்டது தொடர்பில் அசாலினா இந்த கருத்தை வெளியிட்டார்.

எங்களிடம் கோபால்ட் ஆணையம் மற்றும் கருத்து கணிப்பு உள்ளது. ஆகவே, அவர் (கோஹன்) சொல்வது எனக்குப் புரியவில்லை. ஆனால் தனது கட்சிக்காரரிடம் ஆதாரம் இருப்பதாக கருதினால் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தனது கோணத்தில் அதைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது.

ஆனால் எனது பதில் இதுதான் முயற்சி செய்யுங்கள். நாங்கள் அதை எதிர்த்துப் போராடுவோம் என்று அவர் இன்று இங்கு அனைத்துலக கோலாலம்பூர்  நடுவர் மன்ற ஆய்வரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.