கோலாலம்பூர், நவ 13: நவம்பர் 8 ஆம் தேதி வரை மொத்தம் 2.3 மில்லியன் மாணவர்கள்
RM 190 மில்லியன் மதிப்புள்ள மடாணி புத்தக வவுச்சர்களை பெற்றுள்ளனர் என்று கல்வி
அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
மடாணி புத்தக வவுச்சர்களை பயன்படுத்தி 4.8 மில்லியன் (RM149.1 மில்லியன்) புத்தகங்கள் மாணவர்களால் வாங்கப் பட்டுள்ளன என்று ஃபட்லினா தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்தார்.
4ம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு RM50 மதிப்புள்ள
வவுச்சர்கள் வழங்கப் பட்டன மற்றும் அதே நேரத்தில் இடைநிலைப் பள்ளி, தொழிற்கல்லூரி, படிவம் ஆறு, மெட்ரிகுலேஷன் மற்றும் இன்ஸ்டிட்யூட் பெண்டிடிகன் குரு மலேசியா (IPGM) மாணவர்களுக்கு RM100 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்பட்டன”என்று அவர் கூறினார்.
3.5 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கிய இளைய தலைமுறையினரிடையே வாசிக்கும்
ஆர்வத்தைத் தூண்டுவதற்காகப் புத்தக வவுச்சர்கள் வழங்கப்பட்டதாக ஃபட்லினா கூறினார்.
– பெர்னாமா


